மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே அரசு மருத்துவமனையில், பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை அங்கிருந்த பெண்கள் செருப்பால் அடித்து வெளுத்தெடுத்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்களை, நபர் ஒருவர் தனது மொபைல் போனில் ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் கவனித்துள்ளனர்.
அடுத்த கணமே அந்த காமவெறியனைச் சூழ்ந்துகொண்ட பெண்கள், கையில் கிடைத்த செருப்பு மற்றும் துடைப்பங்களை எடுத்துக்கொண்டு நடுரோடு என்றும் பாராமல் அவரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
இதில் அந்த நபரின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டிய போதிலும், ஆத்திரமடைந்த பெண்கள் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
இந்த அதிரடி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி இணையத்தை அதிரவைத்து வருகிறது.
பொதுமக்களிடம் அடி வாங்கிய அந்த நபரை பின்னர் போலீசார் மீட்டு, வழக்குப்பதிவு செய்து தங்களது கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
