மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-2 முதல் பாகத்தை விட குறைவான வசூலை தான் செய்து வருகிறது. முதல் 4 நாட்களில் ரூ.200 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் 2 படம் அடுத்தடுத்த தினங்களில் வசூலில் தடுமாறியது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படம் வெளிவந்து 10 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அந்த வகையில் உலகளவில் இந்த படம் ரூ.285 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது. அதோடு தமிழகத்தில் ரூபாய். 115 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. முதல் பாகத்தின் ரூபாய்.500 கோடி வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்க எந்த விதத்திலும் வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.