இப்போது அட்லீ டைரக்டில் ஷாருக்கான் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 7-ஆம் தேதி ஜவான் திரைப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ஷாருக்கான் அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அட்லீயின் டைரக்டில் முன்பு வந்த திரைப்படங்களை பார்த்தீர்களா, எது அதிகம் பிடித்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு ஷாருக்கான் “தெறி, மெர்சல் ஆகிய 2 திரைப்படங்கள் பிடிக்கும்” என பதிலளித்தார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.