பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் உடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதன் முதல் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகியது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் புது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளார். மேலும் விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.