பிரபல சீரியல் நடிகையான மஹாலக்ஷ்மியை தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு செப்டம்பரில் காதல் திருமணம் செய்து கொண்டார். எந்த அறிவிப்பும் இன்றி அவர்கள் செய்த திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகியது. திருமணத்துக்கு பின்பும் மஹாலக்ஷ்மி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரவீந்தர் தனது உடல் எடையை குறைப்பதற்கு சில முயற்சிகள் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இப்போது ரவீந்தர் தன் மனைவி குறித்து தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். அவர்கள் ஒன்றாக ஹோட்டலில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு “Mr and mrs sapatu pakkigal” என குறிப்பிட்டிருக்கிறார்.