பிரபல நடிகர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போது மணிரத்தினம் இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங்கையும் சேர்த்து எடுத்து முடித்து விட்டார். தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் VFX பணிகள் நடைபெற்று வருகிறது.‌ இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வீடியோ ரிலீஸ் ஆக இருக்கிறதாம். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.