தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து‌ வருகிறார். இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் நயன்தாராவை சந்திப்பதற்காக நேற்று இரவு நயன்தாராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். நடிகர் ஷாருக்கான் நயன்தாரா வீட்டுக்கு சென்றவுடன் அவரை பார்ப்பதற்காக நயன்தாரா வீட்டின் முன்பு ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது.‌

இந்நிலையில் ஷாருக்கான் வீட்டிலிருந்து கிளம்பும்போது காரில் ஏறுவதற்கு முன்பாக நயன்தாராவுக்கு கையில் முத்தம் கொடுத்துவிட்டு செல்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்க விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகர் விஜய் கெஸ்ட் ரோலிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.