தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இவருக்கு ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு கதை திருப்திகரமானதாக இல்லாததால் இயக்குனர் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு வாங்கி கொடுத்தது நயன்தாரா என்று கூறப்படும் நிலையில், விக்னேஷ் சிவனை தற்போது படத்தில் இருந்து நீக்கியதால் அஜித் மீது கடும் கோபத்தில் நயன்தாரா இருப்பதாகவும் இனி அவருடைய படங்களில் நடிக்க கூடாது என நயன்தாரா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் விக்னேஷ் சிவனிடம் முதலில் ஒரு வரி கதையை மட்டும் கேட்டு படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின் முழு கதையை கேட்ட பிறகு கதை பிடிக்காமல் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித் ஒரு வரி கதை கேட்காமல் முழு கதையையும் கேட்டால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.