உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நெடுஞ்சாலையில் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே போகும் ஜோடியின் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது அங்கு இருந்தவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதிக்கு அருகில் உள்ள NH9 நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இதனிடையே வீடியோவில் பேசும் ஒரு நபர், இப்போது மக்கள் ஆபத்தான ஸ்டண்ட்களை வைரலாக்க எந்த எல்லைக்கும் போகிறார்கள் என கூறினார். பைக்கில் ரொமான்ஸ் செய்து கொண்டே போகும் ஜோடியின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.