நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இதன்கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புது சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும். புது விதியின் படி மொபைல் சிம் எடுத்து வங்கிக் கணக்கை துவங்கும் நபர் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும். அதோடு வேறு எந்த நபரின் விவரங்களையும் வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

இப்போது புது சிம் கார்டு வழங்கும் மற்றும் வங்கிக் கணக்கு தொடங்கும் நடைமுறையை மாற்ற அரசு தயாராகி வருகிறது. இதற்கென கேஒய்சி விதிகளை கடுமையாக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புது விதிகளை விரைவில் நடைமுறைபடுத்துமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் வங்கிகளை அரசாங்கம் கேட்கலாம்.