மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை பற்றிய தவறான பிரச்சாரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் சிஇஓ பி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

சில நாட்களுக்கு முன், ஷீரடி சாய் அறக்கட்டளையைச் சேர்ந்தவர் போல் நடித்து, வங்கதேசத்தில் உள்ள பகாலா மசூதியில் ஒருவர் பணம் செலுத்தும் வீடியோ வைரலானது. இந்த ‘போலி’ வீடியோவை நம்பி, ஷீரடி கோவிலுக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த பொய்ப் பிரச்சாரம் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.