பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.

அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் இக்கோவிலின் பூசாரி ஒருவர், வாயில் சுருட்டைப் புகைத்தவாறே தட்டில் இருக்கும் நாணயங்களை அள்ளி அங்கிருக்கும் பக்தர்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. பிராமணர் அல்லாத பூசாரிகளைக் கொண்டு நடத்தப்படும் இக்கோவிலின் சடங்குகளில் இறைச்சி, மதுபானம் மற்றும் சுருட்டுகள் போன்றவை படைக்கப்படுவது வழக்கம் என்ற சூழலில், இந்த நாணய விநியோகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

<a href=”http://

“>

சாதாரண ஆன்மீக வழக்கங்களுக்கு மாறாக பூசாரியே பக்தர்களுக்குப் பணம் கொடுக்கும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “எல்லா இடங்களிலும் பூசாரிகளுக்குத்தான் பக்தர்கள் காணிக்கை தருவார்கள், ஆனால் இங்கே பூசாரியே பக்தர்களுக்குப் பணம் வழங்குகிறார்” எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

காவல் தெய்வ வழிபாடுகளில் இதுபோன்ற சில தனித்துவமான கிராமிய சடங்குகள் தொன்றுதொட்டு நடைமுறையில் இருப்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாக ஆன்மீக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். வழக்கத்திற்கு மாறான இந்த விசித்திர நிகழ்வு திஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது