தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ஆலந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவற்றுடன் 3,000 ரூபாய் ரொக்கப்பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இவற்றுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இந்தப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
