தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சுமார் 21 லட்சம் பேருக்கு ஏற்கனவே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கும் விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
முக்கியமாக, இப்போது புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு தடையின்றி கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார்.
