வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதை புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உறுதி செய்துள்ளார். இக்கூட்டணியில் அதிமுகவிடம் குறைந்தது 6 தொகுதிகளைப் பெற்று போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட அவர், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தற்போது மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்துள்ள அவர், இம்முறை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. வேலூர் தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டமன்றத்திற்குள் நுழைய அவர் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார்.