கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த செய்தியறிந்த கனிமொழி,  பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கோவையில் பேருந்து ஓட்டுநர் சர்மிளாவை இன்று காலை திமுக எம்.பி கனிமொழி சந்தித்த நிலையில், ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தி அறிந்த கனிமொழி, தொலைபேசியில் ஷர்மிளாவுடன் பேசினார். அப்போது, அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.