தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மூடப்படும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில், நேற்று  முதல் 500 டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.  இதுபற்றி பேசிய தங்கமணி, விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைகளை மட்டுமே அரசு மூடியுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் கூறினார்.