சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பேட்டியில், தமிழகத்தின் தற்போதைய அவலநிலை குறித்துப் பெண் ஒருவர் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். “கடற்கரைகளை (Beaches) மெருகூட்டியிருக்கிறார்கள், ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? நாங்கள் எவ்வளவு சொத்து வரி கட்டுகிறோம் என்று தெரியுமா? வரி வாங்குபவர்கள் யாரும் எங்கள் குறைகளைக் கேட்பதில்லை. இதைப் பற்றி வெளியில் பேசுவதற்கே பயமாக இருக்கிறது, ஏனோ இங்கு கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இல்லை” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
• Tamil Nadu was good but now there's nothing
• Beaches enhanced, but no use
• We pay lot of property tax but no one asks
• Hats off to #Vijay for leaving crores & coming to serve people
— Women are with #TVK ❤️மாற்றம் வரும். வெற்றி நிச்சியம் 👍🏽 pic.twitter.com/LyTgxknn12
— VCD (@VCDtweets) December 22, 2025
மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், “கோடிக்கணக்கான சம்பளத்தை உதறிவிட்டு ஒரு மனிதன் மக்கள் சேவைக்காக வருகிறார் என்றால், அவரைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புவது முட்டாள்தனம். படித்தவர்கள் யாரும் இத்தகைய எதிர்மறை விமர்சனங்களை நம்ப மாட்டார்கள்” என்று விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். அரசின் செயல்பாடுகள் மீதான பயத்தையும், விஜய்யின் மீதான நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்திய இந்தப் பெண்ணின் வீடியோ தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
