நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின் சகோதரி கணவரான மதன்குமார் என்பவருடன் ஏற்பட்ட தவறான உறவால் அவர் கர்ப்பமானதும், யாருக்கும் தெரியாமல் வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து வீதியில் வீசியதும் தெரியவந்தது.
குழந்தையை வீசியதில் அது உயிரிழந்த நிலையில், பிரசவத்திற்குப் பின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான மதன்குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு நர்சே பச்சிளம் குழந்தையை வீசி கொன்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
