ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ராதேஷ்யம், அங்குள்ள அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மதியம் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஃபெவிக்விக் திரவம் அவனது கண்களில் தெறித்துள்ளது. இதனால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக அந்தச் சிறுவன் கண்களைத் தேய்க்க, அந்த ரசாயனம் கண் இமைகள் முழுவதும் பரவி, சில நிமிடங்களிலேயே இரு கண்களின் இமைகளும் உறுதியாக ஒன்றாக ஒட்டிக்கொண்டன. வலியால் துடித்த சிறுவனை மீட்ட பள்ளி நிர்வாகம், உடனடியாகக் குஷால்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

“>

அங்கிருந்து அவர்  மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ரசாயனத்தின் தாக்கம் தீவிரமாக இருந்ததாலும், கண் இமைகளைப் பிரிப்பதற்கு அறுவை சிகிச்சை வசதிகள் தேவை என்பதாலும், மேல் சிகிச்சைக்காக அந்தச் சிறுவன் தற்போது உதய்பூர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

“ஃபெவிக்விக் போன்ற ரசாயனங்கள் கண்களில் பட்டால் தேய்க்கக் கூடாது; அது நிலைமையை மோசமாக்கும்” என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், சிறுவனின் கண்பார்வை பாதிக்கப்படுமா என்ற கவலையில் அவனது குடும்பத்தினர் ஆழ்ந்துள்ளனர்.