இன்றைய டிஜிட்டல் உலகில் சில நொடிகள் புகழுக்காகவும், சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளுக்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே துச்சமாக மதிக்கும் அவலம் தொடர்கிறது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் @ankurtweetsyo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது.

அதில், வாலிபர் ஒருவர் அதிவேகமாக வரும் ரயிலுக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் குறுக்காகப் படுத்துக் கொள்கிறார். அடுத்த சில நொடிகளில் அந்தப் பயங்கரமான ரயில் அவருக்கு மேலே கடந்து செல்ல, அவரது நண்பர் அந்தப் பதறவைக்கும் காட்சியைத் தனது மொபைல் போனில் படம் பிடிக்கிறார். ரயில் முழுமையாகக் கடந்தவுடன், ஏதோ ஒரு பெரிய சாதனையைச் செய்துவிட்டது போல அந்த வாலிபர் துள்ளிக் குதித்துக் கொண்டாடுகிறார்.

“>

 

“சிறு தவறுகள் நடந்திருந்தாலும் மரணம் நிச்சயம்” என்ற நிலையிலும், பாதுகாப்பற்ற முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “இது போன்ற உயிரோடு விளையாடும் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என்றும், “ரீல்ஸ் கலாச்சாரம் இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது” என்றும் நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.