ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஹைதராபாத்திற்குச் சென்ற ஒரு தனியார் பேருந்தில் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டார்.
மத்தானியா மற்றும் சோய்லா பகுதிகளில் புகழ்பெற்ற பச்சை மிளகாய்கள் அந்தப் பார்சலில் இருந்த நிலையில், சில மிளகாய்கள் மட்டும் லேசாக வெட்டப்பட்டிருப்பதை ஓட்டுநர் கவனித்தார். அதனைத் திறந்து பார்த்தபோது, மிளகாய்க்குள் விதைகளுக்குப் பதிலாகச் சிறிய வெள்ளித் தாள்களில் சுற்றப்பட்ட விலையுயர்ந்த எம்.டி (MD) வகை போதைப்பொருட்கள் மற்றும் ஸ்மேக் (Smack) மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
जोधपुर से नशा तस्करी का एक हैरान कर देने वाला मामला सामने आया है। देशभर में अपनी खुशबू और तीखेपन के लिए प्रसिद्ध मथानिया और सोयला की हरी मिर्च को कथित तौर पर ड्रग्स तस्करी का नया जरिया बनाया जा रहा है। तस्करों ने नशे की खेप छिपाने का ऐसा तरीका अपनाया कि पहली नजर में किसी को शक तक… pic.twitter.com/moEuU5Xmo3
— NBT Hindi News (@NavbharatTimes) February 3, 2026
“>
ஒரு மிளகாயின் விலை சுமார் 5,000 ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை உள்ளடக்கி இருந்த நிலையில், ஓட்டுநர் உடனடியாக இது குறித்து வீடியோ எடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு தகவல் அளித்தார். இதனையடுத்து, ‘ஆபரேஷன் திரிநேத்ரா’என்ற அதிரடி திட்டத்தின் கீழ் கடத்தல் கும்பலை வேட்டையாட NCB அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
பொதுமக்களும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை ‘ உதவி எண்ணிற்குத் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
