மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில், புதிய கைப்பேசி (செல்போன்) வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால், 8-ஆம் வகுப்பு பயின்று வந்த 13 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்த இந்த மாணவி, தனது பெற்றோரிடம் புதிய கைப்பேசி வாங்கித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மகளின் கோரிக்கையை பெற்றோர் நிராகரித்த நிலையில், மிகுந்த மன விரக்தி அடைந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயாரும் மூத்த மகளும் வீடு திரும்பியபோது, இளைய மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.