பாகிஸ்தானைச் சேர்ந்த நசீர் சூம்ரோ உலகின் மிக உயரமான மனிதர்களில் ஒருவர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நசீர் சூம்ரோ தனது 55 வயதில் உயிரிழந்தார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர் சூம்ரோ 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர்.
இந்த நிலையில் நுரையீரல் நோயாலும் உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக நசீர் அவதிப்பட்டு வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி நசீர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
