வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயிலிருந்து ஹா லாங் வளைகுடா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு, கடலோர பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் கவிழ்ந்து பரிதாபகரமான விபத்தில் சிக்கியுள்ளது. படகில் பயணித்தவர்கள் திடீரென கடலில் விழுந்து தத்தளித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் விரைந்து வந்து 11 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த கொடூர விபத்தில் 8 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 பேர் உயிரிழந்தனர் என்பது மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாயமான 8 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீட்புக் குழுவினர் தெரிவித்ததாவது, “திடீரென கடலில் வீசிய சூறைக்காற்றே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பல்வேறு படகுகள் மற்றும் குட்பாத் ஆள்கள் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.