அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 767-400 ரக விமானம் நேற்று தீவிபத்துக்கு உள்ளானது. விமானம் டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களுக்குள் இடது எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால், விமானத்தில் பயணித்த அனைவரும் பரபரப்படைந்தனர்.
விமானியின் தருணவுணர்வு மற்றும் அவசரநிலை அறிவிப்பின் பேரில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் உடனடியாக விமானத்தை மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்குத் திருப்பி வழிகாட்டியது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து எஞ்சினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது பெரிய தப்பிக்கிற தருணமாகும்.
❗️Boeing 787 Makes Emergency Landing in LA 🇺🇸 – Engine ON FIRE 🔥
Video claims to show a Delta Airlines flight bound for Atlanta on Friday making an emergency landing at LAX. The engine reportedly caught fire shortly after take-off.
📹 @LAFlightsLIVE https://t.co/t1HBVLDi0P pic.twitter.com/vYNgkpZJcq
— RT_India (@RT_India_news) July 19, 2025
“>
இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இது இந்த ஆண்டு டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டாவது முறை தீ விபத்து ஏற்படும் சம்பவமாகும். கடந்த ஏப்ரல் மாதம் ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இத்தகைய அதே போனிங் விமான ரகத்தில் எஞ்சின் தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் விமானப் பாதுகாப்பை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.
