ஹரியானா மாநிலம் அம்பாலாவில், பெற்ற மகள் ஒருவரே தனது வயதான தாயைக் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது தாயின் முடியைப் பிடித்து இழுத்து, இரக்கமின்றித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது. ஒரு தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்து, மிருகத்தனமாக நடந்து கொண்ட அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

​முதியோர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தபோதிலும், வீட்டிற்குள்ளேயே இத்தகைய கொடுமைகள் நடப்பது சமூகத்தின் அவல நிலையை எடுத்துக் காட்டுகிறது. “இப்படி ஒரு மகள் இருப்பதற்குப் பிள்ளையே இல்லாமல் இருந்திருக்கலாம்” என இணையவாசிகள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஹரியானா காவல்துறை தலையிட்டு, அந்தப் பெண்ணைக் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.