சாதாரணமாக நாம் துணி துவைக்கும்போதோ அல்லது அயர்ன் செய்யும்போதோ எதிர்பாராமல் நடக்கும் தவறுகளைக் கூட, இன்று பல சொகுசு பிராண்டுகள் ‘பேஷன்’ (Fashion) என்ற பெயரில் லட்சக்கணக்கில் விற்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் ‘வெட்மெண்ட்ஸ்’ (Vetements) என்ற பிராண்ட், இஸ்திரி போடும்போது சூடுபட்டு கருகியது போன்ற ஒரு வெள்ளைச் சட்டையை ஒரு லட்சம் ரூபாய்க்கு ($1,139) அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. “வீட்டில் என் அப்பா இதற்காக என்னை அடி வெளுத்திருக்கிறார், ஆனால் இப்போது இதுதான் டாப் பேஷனா?” என நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
VETEMENTS made a graphic shirt with an “iron burn” print that retails $1,139 pic.twitter.com/F5e9pkLQ8j
— STAYGROUNDEAD TV (@staygroundeadtv) February 16, 2026
இதற்கு முன்னதாக ‘பாலென்சியாகா’ (Balenciaga) என்ற நிறுவனம், நாம் குப்பைகளைக் கொட்டப் பயன்படுத்தும் ‘டிராஷ் பேக்’ (Trash Bag) போன்றே இருக்கும் ஒரு பையை 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளையும், சாதாரணமாகத் தூக்கி எறியும் பொருட்களையும் கூட, பணக்காரர்களுக்கான ஆடம்பர அடையாளமாக மாற்றி கோடிகளைச் சம்பாதித்து வருகின்றன இந்த முன்னணி நிறுவனங்கள்.
