வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் அனைவருக்கும் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணின் கதை ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. தனது 16 வயதில், குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் வருவதற்கு முன்பே இவர் வேலை செய்யத் தொடங்கினார்.
மேலும் ஆரம்பத்தில் ஒரு பகுதிநேர கால் சென்டரில் வெறும் ₹4,500 மாதச் சம்பளத்திற்குச் சேர்ந்தார். தொடர்ந்து கல்லூரிப் படிப்பை படித்துக்கொண்டே, பல நிறுவனங்களில் இரவு நேர ஷிப்டுகளில் மிகக் குறைந்த சம்பளத்திற்குத் தன் உழைப்பை முதலீடு செய்தார். ஆரம்பத்தில் சம்பளத்தை எப்படி பேரம் பேசி வாங்குவது என்று கூடத் தெரியாமல் இருந்த ஜோதிஸ்ரீ, தன் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தொடர்ந்து முன்னேறினார்.
Woman who started her career with ₹4,500 call centre job now earns ₹3 lakh a month: ‘Learn new skills, try.’ https://t.co/m7hUttv2Pb
“>
இதனால் காலப்போக்கில், சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட அவர், புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு ஒரு ‘ஃப்ரீலான்ஸ் சோஷியல் மீடியா மேனேஜராக’ மாறினார். இன்று அவரது விடாமுயற்சியின் பலனாக, மாதத்திற்கு ₹3 லட்சம் வரை வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வெற்றிக் பயணத்தைப் பகிர்ந்த அவர், “வாழ்க்கையில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சூழ்நிலைகளைக் காரணம் காட்டாமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற நினைத்தால் எவராலும் இத்தகைய இமாலய வெற்றியைப் பெற முடியும் என்பதற்கு ஜோதிஸ்ரீயின் இந்த உத்வேகப் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
