பொதுவாகவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சிலவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அதன்படி வித்தியாசமாக உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய தலைமுடி மட்டுமல்லாமல் கீழே கிடந்த முடிகளை எடுத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பிறகு பழக்கத்தை கைவிட்டாலும் தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்வதில் அவரின் இரைப்பை முழுவதும் முடி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலமாக 2.5 கிலோ முடியை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது அந்தப் பெண் நலமாக உள்ளார்.
