உலகப் புகையில்லா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு புகையிலையால் ஏற்படும் தீங்குகள் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் நேற்று எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவம் பரத்வாஜ் என்ற சமூக வலைதள பயனாளி ஒருவர் சம்பந்தமில்லாத வகையில் டெல்லி போலீசாரிடம் ஒரு கோரிக்கை விடுத்தார். அதாவது அந்த வாலிபர் தனக்கு ஒரு காதலியை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று அவர்களிடம் கேட்டார்.
அதற்கு டெல்லி காவல்துறையினர் உங்கள் காதலி காணாமல் போனால் மட்டும் தான் நாங்கள் கண்டுபிடித்து தருவோம். மற்றபடி எங்களால் புதிதாக உங்களுக்கு காதலியை தேடி தர முடியாது என நகைச்சுவையாக பதில் அளித்தனர். அந்த வாலிபர் அதோடு தன் பதிவில் சிங்கில் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக சிக்னல் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் போலீசார் நீங்கள் சிக்னலாக இருந்தால் பச்சையாக இருங்கள். சிவப்பாக இருக்க வேண்டாம் என நகைச்சுவையாக பதிவிட்டு இருந்தனர். அதாவது காதல் வாழ்வில் பரஸ்பரம் மற்றும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக பச்சை சிக்கனலை அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
Meri girlfriend kab banwaoge ?
Main abhi signal Hoon Delhi police 🚨
This is not fair you should help me to find a girlfriend for me
— Shivam Bhardwaj (@kilvishup90) May 31, 2024
