தமிழகத்தில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம், படித்த இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப (10-ஆம் வகுப்பு தோல்வி முதல் பட்டதாரி வரை) மாதம் ரூ.200 முதல் ரூ.600 வரை வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களுக்கும் தகுதியுடைய பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டிலும் பயன் பெற முடியுமா என்ற கேள்விக்கு அரசு தற்போது விடையளித்துள்ளது.
ஒரு பயனாளி ஒரே நேரத்தில் இரண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற இயலாது என்பதால், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
