உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்ட திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இன்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சரின் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பங்கள் கொடுங்கள்.
நிச்சயமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறினார். இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நவம்பர் 14-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
