தமிழக அரசு செயல்படுத்தி வரும்  குடும்ப தலைவிகளுக்கான மாதம் ₹1000 “மகளிர் உரிமைத் தொகை திட்டம்” குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். வாக்குக்காக வழங்கப்படும் தொகையாகவே இந்த தொகையை வகைப்படுத்தும் வகையில், அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

“நீங்க கேட்ட கேள்விக்கே நாங்க பதிலா பேசுறோம். இது வளர்ச்சி இல்லை, வாக்குக்காக பணம் கொடுக்கும் ஒரு திட்டம் தான்,” என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மக்களை கவனிக்காமல் இருந்துவிட்டு, தேர்தல் ஆறு மாதங்கள் முன் குடும்பங்களை தேடி சேர்த்து ₹1000 கொடுப்பது ஒருவகையான தேர்தல் லஞ்சம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆறு மாதத்துக்குத் தொகை கொடுக்குறதுனால ஒரு வாக்குக்கு ₹6000… எட்டு மாதம் கொடுத்தா ₹8000. இதை வளர்ச்சின்னு சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பிய சீமான், உண்மையில் மக்களுக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், தேர்தல் வந்ததால்தான் தற்போது செயல்படுத்தப்படுவது போல அரசியல்முறை தவறாகப் போய்விட்டதாக விமர்சித்துள்ளார்.

இந்த தொகை மக்கள் உரிமை என்றுகூட சொல்ல முடியாது, வாக்குப்பதிவு நேரத்தில் மட்டுமே நினைவுக்கு வருவதை எப்படி நியாயப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

முடிவாக, மகளிர் உரிமைத் தொகை குறித்து தொடரும் அரசியல் விவாதங்கள், இது மக்களுக்கு உரிமையா? வாக்குக்காசா? என்பது என்றே தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.