தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். தற்போது இவருடைய பாஸ்போர்ட் காணாமல் போனதால், புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீலாங்கரை காவல் ஆய்வாளர், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆகியோர் இது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

