ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு முதியவர் நவீன டெலிவரி நிறுவனமான ‘பிளிங்கிட்’ (Blinkit) பையை முதுகில் சுமந்து கொண்டு, கம்பீரமாக ஒரு கருப்பு நிற குதிரையில் சென்று பொருட்களை டெலிவரி செய்யும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
பாரம்பரிய உடை மற்றும் தலைப்பாகையுடன் அவர் குதிரை சவாரி செய்யும் விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு இது ஒரு சிறந்த “இயற்கை வழி” தீர்வாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
நவீன தொழில்நுட்பமும், பாரம்பரியமும் இணைந்த இந்தத் தனித்துவமான டெலிவரி முறை இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்.
