இந்தியாவின் உயரியப் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான 2026-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காத்திருந்த தேர்வர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதிச் செய்தி கிடைத்துள்ளது.

இன்று (பிப்ரவரி 24) மாலை 6 மணியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேதியை வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 6 மணி வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக யுபிஎஸ்சி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சர்வர் முடங்கியதால், பலரால் விண்ணப்பிக்க முடியாமல் போனது.

இதனைப் பரிசீலித்த தேர்வாணையம், கூடுதலாக மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. சுமார் 933 காலிப்பணியிடங்களுக்கான இந்தத் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதல்நிலைத் தேர்வு (Prelims) திட்டமிட்டபடி வரும் மே 24-ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.