உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘நீல நிற டிரம்’ என்பது இப்போது மரணத்தின் அடையாளமாக மாறி, ஒட்டுமொத்த மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நீல நிற பிளாஸ்டிக் டிரம்களில் அடைக்கப்பட்டு வீசப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
சமீபத்தில் லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுத வற்புறுத்திய தந்தையை, அவரது மகனே சுட்டுக்கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி நீல நிற டிரம்மில் அடைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக உயிரிழந்தவரின் மகள் அளித்துள்ள வாக்குமூலம் எவரையும் கண் கலங்கச் செய்யும் வகையில் உள்ளது. “பாசமான அப்பாவை இப்படி டிரம்மில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை” என அவர் கதறியது காண்போரை நெகிழ வைத்துள்ளது.
முன்னதாக மீரட்டில் ஒரு பெண் தனது கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்று டிரம்மில் சிமெண்ட் பூசி மறைத்த சம்பவமும் இதே பாணியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகள் உடலை மறைக்க இந்த நீல நிற டிரம்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது தற்போது அம்மாநில போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
