பீகார் மாநிலத்தில், பணி நேரத்தில் அரசு வாகனத்திற்குள் அமர்ந்து பணத்தை எண்ணிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து, எஸ்பி யோகேந்திர குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சோனல் குமாரி உட்பட மூன்று காவலர்களை அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோ சுமார் இரண்டு மாதங்கள் பழமையானது என்பது டிஎஸ்பி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
🚨 VIDEO VIRAL: मधुबनी की ASI सोनल कुमारी पुलिस गाड़ी में पैसे गिनती दिखीं, 3 जवान सस्पेंड! 2 महीने पुराना VIDEO आया सामने, SP ने लिया एक्शन! पैसे कहाँ से आए? 🤔👮♀️ #BiharPolice #ViralVideo pic.twitter.com/bjvrG5dpKX
— Shubham Tripathi 📚📚 (@Shubham9250500) June 25, 2026
“>
இதன் அடிப்படையில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் சோனல் குமாரி, வாகனத்தில் உடன் இருந்த பெண் காவலர் சௌந்தர்யா ராய் மற்றும் காவலர் கௌதம் குமார் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்த எஸ்பி, போலீஸ் துறையின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
