கிரேட்டர் நொய்டாவில் பட்டப்பகலில் அரங்கேறிய ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி ஒன்றின் குறுகிய சந்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போதே, அங்கு வந்த கும்பல் ஒன்று குறிவைத்து ஒருவரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டின்போது தெருவில் விளையாடிய குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவம் சட்ட ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.