ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள சிஎன்ஜி பெட்ரோல் பம்பில் எஸ்டிஎம் மற்றும் பம்ப் ஊழியர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில், இருவரும் ஒருவரை ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை இரவு, பில்வாரா மாவட்டத்தின் ஜஸ்வந்த்புரா பெட்ரோல் பம்பில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, பிரதாப்கர் தற்போதைய எஸ்டிஎமாகவும், மண்டலின் முன்னாள் எஸ்டிஎமாகவும் உள்ள சோட்டு லால் சர்மா, பம்பில் வந்திருந்தார். அப்போது ஊழியர்களுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
भीलवाड़ा के जसवंतपुरा में एसडीएम छोटू लाल शर्मा ने पेट्रोल पंप कर्मचारी को थप्पड़ मारा, जवाब में कर्मचारी ने भी पलटवार किया। वायरल हुआ #CCTV फुटेज, पुलिस ने तीन कर्मचारियों को गिरफ्तार किया। #भीलवाड़ा #SDMControversy #राजस्थानसमाचार #ViralVideo #BreakingNews pic.twitter.com/UVoKxTHLlP
— राजस्थानी पत्रकार (@RajasthanJourno) October 22, 2025
தகராறு தீவிரமடைந்த நிலையில், எஸ்டிஎம் சோட்டு லால் சர்மா பம்ப் ஊழியருக்கு அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, அந்த ஊழியரும் எஸ்டிஎம்மை அறைந்தார். சம்பவ இடத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் இருவரையும் பிரிக்க முயன்ற காட்சிகள் சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ராயல காவல் நிலையம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை தொடங்கினர். இதற்கிடையில், தீபக் மாலி, பிரபுலால் குமாவத், ராஜா சர்மா எனும் மூன்று பம்ப் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, RAS அதிகாரி சோட்டு லால் சர்மா முந்தைய காலங்களிலும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் என கூறப்படுகிறது. ஒழுக்கக்கேடு மற்றும் தவறான நடத்தை தொடர்பாக முன்பும் அவர்மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த சமீபத்திய சம்பவம் மூலம் எஸ்டிஎம் சோட்டு லால் சர்மா மீண்டும் பொதுமக்கள் கவனத்துக்கு வந்துள்ளார். போலீசார் இரு தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்து, தகராறின் உண்மை காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
