ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த அற்பித் என்ற இளைஞர், மெட்ரோ நகரங்களை விட சொந்த ஊரில் வாழ்வது ஏன் சிறந்தது என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
பெங்களூரு, புனே, டெல்லி போன்ற நகரங்களில் இருக்கும் அவரது நண்பர்கள் தன்னை அங்கு அழைப்பதாகக் கூறும் அற்பித், “மெட்ரோ நகரங்களில் 1 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதும், சொந்த ஊரில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் ஒன்றுதான்; அங்கு போனால் வீட்டு வாடகை, போக்குவரத்து, தினசரி மனஅழுத்தம் எனப் பாதி காசு காலியாகிவிடும், ஆனால் சொந்த ஊரில் நிம்மதியும், சேமிப்பும், நம்மோடு நம் சொந்தங்களும் இருப்பார்கள்” என்று எதார்த்தமாகப் பேசியுள்ளார்.
அதிக சம்பளம் என்ற மோகத்தில் மெட்ரோ நகரங்களுக்குச் சென்றாலும், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மனஅழுத்தம் காரணமாக வாழ்க்கை தரம் பெருமளவில் மாறுவதில்லை என்ற கசப்பான உண்மையை இந்த வீடியோ உடைத்துக் காட்டியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “தம்பி நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை, எங்களாலயும் இதை ரிலேட் பண்ணிக்க முடியுது” என்றும், “மெட்ரோ நகரத்து நரக வாழ்க்கையை விட சொந்த ஊர் சொர்க்கமே” என்றும் அற்பித்தின் கருத்துக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கி இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் தீயாய் பரப்பி வருகிறார்கள்.
