பெங்களூருக்கு அருகிலுள்ள கக்கோலிபுரத்தைச் சேர்ந்த கே.டி. கெம்பம்மா என்ற பெண், வறுமையின் காரணமாகவும் எளிதில் பணக்காரியாக மாற வேண்டும் என்ற பேராசையின் காரணமாகவும் குற்றப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சீட்டுப் பிசினஸில் ஏற்பட்ட தோல்வியும், கடன் தொல்லையும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றச் செய்தது. அதன்பிறகு நகைப்பட்டறைகளில் வேலை செய்தபோது, தங்கத்தை மினுமினுக்கப் பயன்படும் ‘பொட்டாசியம் சயனைடு’ நஞ்சின் கொடூரத் தன்மையை அவர் தெரிந்து கொண்டார்.
திருட்டு வழக்கில் கைதாகிச் சிறை சென்ற அவர், வெளியே வந்ததும் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு ‘சயனைடு மல்லிகா’ என்ற பெயரில் பகீர் குற்றங்களில் ஈடுபடத் தொடங்கினார்.
குடும்பச் சிக்கல்களாலும், வறுமையினாலும் மனமுடைந்து கோவில்களுக்கு வரும் பெண்களைக் குறிவைத்து மல்லிகா தனது வலையில் வீழ்த்தினார். அவர்களுக்குச் சிறப்புப் பூஜை செய்தால் அனைத்துத் துயரங்களும் தீர்ந்துவிடும் என்று நம்ப வைத்து, தங்களின் அனைத்து நகைகளையும் அணிந்துகொண்டு தனிமையான இடத்திற்கு வருமாறு கூறினார்.
அப்படி வந்த மம்தா ராஜன் என்பவரை முதல் இரையாக்கிய அவர், பூஜையின் போது கொடுக்கும் தீர்த்தம் என்று கூறி சயனைடு கலந்த நஞ்சைக் குடிக்க வைத்து கொன்றார்; அதன்பிறகு அவர்களது நகைகளுடன் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
கடந்த 1999 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில், குழந்தை பாக்கியம் மற்றும் குடும்பத் தகராறுகளால் அவதிப்பட்ட பிள்ளம்மா, நாகலட்சுமி உட்பட சுமார் 6 பெண்களை இதே முறையில் மல்லிகா தீர்த்துக் கட்டியுள்ளார்.
சயனைடு மல்லிகா: மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திய மரண வியாபாரி
1990-களின் இறுதிப் பகுதி. அந்தச் சிறைச்சாலையின் டி-பிளாக்கில் உள்ள 321-ஆம் எண் அறையின் குளிர்ந்த தரையில் அமர்ந்திருந்த ஒரு பெண், கரிக்கட்டையால் சுவரில் ஒரு வாசகத்தை எழுதினாள்:
“இனி ஒருபோதும் இந்த இரும்புக்… pic.twitter.com/iTwsGrYpae
— Babu babuji (@Babubabuji16) August 30, 2026
“>
ஆன்மீக முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவிப் பெண்களின் உயிரையும் நகைகளையும் குறிவைத்த இந்தச் சயனைடு மல்லிகாவின் கொடூரச் செயல்கள், அந்த காலக்கட்டத்தில் கர்நாடக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
