பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில் புறாக்கள் எச்சமிட்டு அசுத்தம் செய்வதைத் தடுக்க, தொழில்நுட்ப ஆர்வலர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள ஒரு புதுமையான சாதனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புறாக்களின் வருகையால் ஏற்படும் அசுத்தம் மற்றும் அவற்றின் இறகுகளால் மனிதர்களுக்குச் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க மக்கள் வழக்கமாக வலைகள் அமைப்பது அல்லது கைகளைத் தட்டி விரட்டுவது போன்ற வழிகளைக் கையாளுவார்கள்.
ஆனால், இந்த இளைஞர் ஆரஞ்சு பை 5 மினி கம்ப்யூட்டர், யூஎஸ்பி கேமரா, மோஷன் டிராக்கிங் மற்றும் ஏஐ விஷன் மாடல் ஆகியவற்றைக் கொண்டு ஒரு தானியங்கி ‘வாட்டர் கன் டரெட்’ பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அதிநவீன சாதனம், தனது கேமரா மூலம் பால்கனியை நிகழ்நேரத்தில் கண்காணித்து, அங்கு புறாக்கள் வருவதை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துல்லியமாகக் கண்டறிகிறது.
THIS GUY BUILT AN AUTOMATED PIGEON DEFENSE SYSTEM FOR HIS BALCONY
pigeons kept nesting on his balcony so he engineered a full detection and deterrent system
here’s how it works:
1\ camera captures video in real time
2\ an AI model identifies the pigeon in real time
3\ a water… pic.twitter.com/GHiBoH3t7j— Om Patel (@om_patel5) May 14, 2026
“>
மேலும் புறாக்கள் இருப்பது உறுதியானதும், சர்வோ மோட்டார்கள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள வாட்டர் கன் தானாகவே அந்த திசையை நோக்கித் திரும்பி, புறாவின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதை விரட்டுகிறது. இந்த சாதனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மனிதர்களையோ அல்லது பிற பறவைகளையோ குறிவைக்காமல், புறாக்களை மட்டுமே துல்லியமாக அடையாளம் கண்டு செயல்படுகிறது.
மேலும், இந்த தொழில்நுட்பம் புறாக்களுக்கு எந்தவிதமான காயத்தையும் ஏற்படுத்தாமல், வெறும் தண்ணீரை மட்டுமே தெளித்து பாதுகாப்பாக விரட்டுவதால், நகர்ப்புற குடியிருப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த எதிர்கால பாதுகாப்பு சாதனமாக இருக்கும் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
