லாகூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இழிவுபடுத்தி ரசிகர்கள் எழுப்பிய “பும்ரா கே அப்பு (Bumrah’s father)” என்ற ஆபாச கோஷங்களை சிரித்தபடி வரவேற்று கைதட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை 2025 தொடரில் பும்ராவின் பந்துவீச்சில் மூன்று சிக்ஸர்கள் அடித்துச் சாதனை படைத்த காரணத்தால், ரசிகர்கள் ஃபர்ஹானை ‘பும்ராவின் அப்பா’ என்று கோஷமிட்டு பும்ராவைக் கிண்டல் செய்தனர்.
View this post on Instagram
“>
எல்லைக்கோட்டிற்கு (boundary line) அருகில் இருந்தபோது, ஃபர்ஹான் விளையாட்டு மனப்பான்மை சற்றும் இல்லாமல் இந்தக் கேவலமான கோஷங்களைக் கேட்டு ரசித்ததாகவும், கைதட்டி ஊக்கப்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் செயல் விளையாட்டுத் தரத்தைக் குறைப்பதாக பலர் கண்டித்துள்ளனர்.
