சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப்போது அதிகம் பேசப்படும் விஷயம், சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் இந்தியத் துணை கேப்டன் சுப்மன் கில் பற்றியதுதான். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியைப் பார்ப்பதற்காக ஹோபார்ட்டுக்கே சாரா டெண்டுல்கர் வந்துவிட்டார்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், சுப்மன் கில் அடித்த ஒரு அட்டகாசமான பவுண்டரியைக் கண்ட சாரா டெண்டுல்கர், ரசிகர்களின் கேமராவில் சிக்கினார். கில்லின் பவுண்டரிக்கு அவர் கொடுத்த அன்சீன் ரியாக்ஷன் தான் தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து, சமூக ஊடகங்களில் பகிர்வு மழையில் நனைந்து வருகிறது.
Sara Tendulkar’s reaction to Shubman Gill’s boundary 😀 pic.twitter.com/lVlJ9MRQea
— Stupid_Opinions (@IAmCricketGeek) November 2, 2025
“>
இதற்கிடையில், இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிம் டேவிட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைக் குவித்தது. இந்தியத் தரப்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
