வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், படகில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டே டிஜே பாடலுக்கு நடனமாடிய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கங்கை நதியில் பிரியாணி விருந்து வைத்த 14 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மது விருந்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜுன் ராஜ்பர் என்ற அந்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் அடையாளம் கண்டு பிடித்துள்ளனர். சீத்லா மாதா கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டு போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் வாரணாசி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
<a href=”http://

“>

தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கங்கை நதியின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.