ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த அந்த இன்னோவா கார், மழையினால் சாலை வழுக்கியதால் நிலைதடுமாறி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி வயல்வெளியில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முகேஷ், அமுல்யா மற்றும் டிரைவர் அச்யுதானந்தா ஆகிய மூவர் காயமடைந்தனர். இதில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வந்ததும், மோசமான வானிலையுமே இந்த விபத்திற்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
