கோவாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், தீக்ஷா பர்வாட்கர் என்ற 23 வயது ஹோட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்ஷாவும் அவரது சக ஊழியரான அருண்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபரின் மகன் ஓட்டி வந்த அதிவேக மினி கூப்பர் கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தீக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அருண்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த 22 வயது டேரியஸ் டயஸ் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முறையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், முக்கிய விவரங்களை அதிகாரிகள் மறைப்பதாகவும் தீக்ஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
<a href=”http://
Panjim Police have registered an FIR against a 21‑year‑old youth from Vasco in connection with the fatal accident at Dona Paula, in which Diksha Parwadkar from Miramar lost her life. Another victim, D. Arun Kumar, sustained injuries in the incident.
Goa news | Dona Paula pic.twitter.com/jAOoUlLxva
— Herald Goa (@oheraldogoa) April 6, 2026
“>
செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் விசாரணையில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
