குருகிராமின் பகுதியில் இரண்டு நபர்கள் தங்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்களான இவர்களுக்குள் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஆயுதமாகப் பயன்படுத்தும் அளவிற்குச் சென்றது.

பட்டப்பகலில் நடந்த இந்த மோதலால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். ஒரு நபர் கையில் கல்லுடன் காரைத் துரத்தியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, இருவரும் நண்பர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் புகார் அளிக்க மறுத்துவிட்டனர்.
<a href=”http://

“>

பின்னர், இரு தரப்பினரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து, எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்த இவர்களின் செயலைக் கண்டிக்காமல், போலீஸார் மெத்தனமாகச் செயல்பட்டதாக இணையதளங்களில் மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.